4.6.2015
கேள்வி: ஐயா, இளமை பருவத்தில் வருகிற காதல் உண்மையான காதல் அல்ல. அது மோகம். அதை அனுமதிப்பது நல்லதா?
பதில்: காதல் மட்டுமே உண்மை. எந்த வயதில் வந்தாலும் அது உண்மைதான், அது பொய்யாக இருக்க முடியாது. இது ஒரு குறுகிய காலமே நீடிப்பதாக இருக்கலாம், ஆனால் சுவை ஒன்றே. நீங்கள் கடலில் எங்கிருந்து கடல்நீரை எடுத்து சுவைத்தாலும், சுவை ஒரே மாதிரிதான் இருக்கும். ஆனால் கடல் பற்றிய புரிதல் மட்டும் மாறுபடும்.
நீங்கள் கடற்கரையில் நிற்கிறீர்கள் என்றால், கடலின் அலைகளை மட்டுமே காண்பீர்கள். நீங்கள் கடலுக்குள் ஆழமாகச் சென்றால், கடலின் அமைதியைக் காண்பீர்கள். மோகமும் காமமும் அன்பெனும் பெருங்கடலின் மேற்பரப்பு போன்றது. மேற்பரப்பில், அலைகள் இருக்கும். ஆனால் மேற்பரப்பைக் கடக்காமல், நீங்கள் எப்படி ஆழத்திற்குச் செல்ல முடியும்?
மேற்பரப்பு என்பது அன்பின் நுழைவாயிலாக இருக்கும் உடல். நீங்கள் மேற்பரப்பைக் கண்டித்து நுழைவாயிலை மூடினால், எவ்வாறு ஆழமாக செல்ல முடியும்? ஒரு நபரின் உடலை நேசிக்காமல் நீங்கள் எப்படி அவரை நேசிக்க முடியும்? ஒரு நபர் உடல், மனம் மற்றும் ஆன்மா ஆகியவற்றின் கலவையாகும். உடல் இல்லாத ஒருவர் பிசாசு.
ஆன்மாவின் திட வடிவம் உடல். உடலின் திரவ வடிவம் ஆன்மா. உடல் சுற்றளவு. ஆன்மா மையம். சுற்றளவின் வழியாக மட்டுமே மையத்திற்கு செல்வது சாத்தியமாகும். தீர்வு நுழைவாயிலை மூடுவது அல்ல. மேற்பரப்பைக் கண்டனம் செய்வது மற்றும் குற்ற உணர்வை உருவாக்குவது அல்ல. ஆனால் ஆழமாகச் செல்ல சூழ்நிலையை உருவாக்குவது.
காதல் என்பது மன முதிர்ச்சி. நீங்கள் ஆரம்பத்திலேயே அதை நிறுத்தினால், முழு வாழ்க்கையும் பரிதாபமாக இருக்கும். அன்பு எந்த அளவிற்கு ஆழமாக இருக்கிறதோ, அந்த அளவிற்கு முதிர்ச்சி இருக்கும். எந்த அளவிற்கு முதிர்ச்சி இருக்கிறதோ, அந்த அளவிற்கு துன்பங்கள் குறைவாக இருக்கும்.
காலை வணக்கம்..... அன்பில் முதிர்ச்சி அடையுங்கள்...💐
வெங்கடேஷ் - பெங்களூர்
(9342209728)
வெற்றி உண்டாகட்டும்
Comments