1.6.2015
கேள்வி: ஐயா அன்பிற்கும் கடமைக்கும் என்ன வித்தியாசம்?
பதில்: அன்பு இணைக்கிறது. எனவே அது மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அவர்களைக் கவனித்துக்கொள்கிறது. இங்கே அக்கறை காட்டுவது மற்றும் பகிர்ந்துகொள்வது தானாக முன்வந்து செய்யப்படுகிறது. எனவே, அன்பு என்பது முதிர்ச்சியின் அறிகுறியாகும்.
உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே நீங்கள் அதை திருப்பிச் செலுத்த வேண்டும் என்று கடமை கூறுகிறது. இது கொடுக்கல் வாங்கல் கொள்கையைப் போன்றது. இங்கே அக்கறையும் பகிர்வும் நடக்கும். ஆனால் அன்பு இருக்காது . எனவே அவை இயந்திரத்தனமாக நடக்கின்றன. அவை ஆர்வமின்றி அல்லது பலவந்தத்தால் அல்லது பயத்தால் அல்லது குற்ற உணர்ச்சியால் நடக்கின்றன. எனவே, கடமை என்பது ஒரு வகையில் முதிர்ச்சியற்ற தன்மையின் அறிகுறியாகும்.
உங்கள் பெற்றோர் உங்களை வளர்த்தார்கள், எனவே நீங்கள் அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும் என்று சொல்வது கொஞ்சம் அசிங்கமாக தெரிகிறது. நீங்கள் உங்கள் பெற்றோரை நேசிக்கிறீர்கள், ஆகையினால் அவர்களை கவனித்துக் கொள்ளுகிறீர்கள் என்று சொன்னால் அது சரியாக இருக்கும். அன்பைத் தவிர நீங்கள் செய்யும் அனைத்தையும் ஒரு இயந்திரம் செய்ய முடியும். எனவே மனிதன் என்பதற்கு உங்களுக்கு ஒரே ஆதாரம் அன்புதான்.
காலை வணக்கம் ... அன்போடு கவனித்துக் கொள்ளுங்கள் மற்றும் பகிர்ந்து கொள்ளுங்கள்...💐
வெங்கடேஷ் - பெங்களூர்
(9342209728)
வெற்றி உண்டாகட்டும்
Comments