18.4.2016
கேள்வி: ஐயா, 14 மற்றும் 18 வயதுடையவர்கள் ஏன் தியானம் செய்ய மற்றும் வாக்களிக்க பரிந்துரைக்கப்படுகிறார்கள்?
பதில்: 14 வயது வரை, நமது ஜீவ வித்து ஆற்றல் (sexual vital force) மூளையில் தங்கி உடல் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படுகிறது. ஒரு நபர் உடல் முதிர்ச்சியை அடையும்போது, மிகுதியாக இருக்கும் ஆற்றல் மூலதாரவுக்கு வரும். இது சராசரியாக 14 வயதில் நடக்கிறது. மூலதராவிலிருந்து மூளைக்கு ஆற்றலை உயர்த்துவது தீட்சை என்று அழைக்கப்படுகிறது. ஆற்றல் கீழே இறங்கி விட்டதால், அதை உயர்த்த வேண்டும். இல்லையெனில், உயர்த்த வேண்டிய அவசியமில்லை. எனவே, தியானத்திற்கான தீட்சை 14 வயதிற்குப் பிறகு அல்லது உடல் வளர்ச்சி அடைந்த பிறகு வழங்கப்படுகிறது. தலைமுறைகளுக்கு இடையில் வாழ்க்கை முறை மாறும்போது, இந்த வயது வரம்பும் மாறுகிறது.
18 வயதில் மனிதர்கள் உளவியல் முதிர்ச்சியை அடைகிறார்கள் என்று அரசாங்கம் முடிவு செய்துள்ளது. எனவே, 18 வயதிற்குப் பிறகு, தலைவரைத் தேர்ந்தெடுக்கவும் , தங்களின் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கவும் மனிதர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால், உண்மையில், பெரும்பான்மையான மக்களுக்கு 18 வயதிற்குப் பிறகும் அறிவு முதிர்ச்சி இல்லை. சிலருக்கு 18 வயதிற்கு முன்பே அறிவு முதிர்ச்சி உள்ளது. அரசாங்கம் சராசரியாக 18 வயதை நிர்ணயித்துள்ளது.
காலை வணக்கம் .. உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் முதிர்ச்சி அடையுங்கள்....💐
வெங்கடேஷ் - பெங்களூர்
(9342209728)
வெற்றி உண்டாகட்டும்
Comentarios