19.5.2015
கேள்வி: ஐயா, தயவுசெய்து 'ஒரு குடும்ப துறவியாக இருங்கள்' என்பதை விளக்க முடியுமா?
பதில்: ஒரு குடும்ப மனிதனாக இருந்துக்கொண்டே துறவியாக மாற இது உங்களை வலியுறுத்துகிறது. துறத்தல் மனதுடன் தொடர்புடையது என்பதால், நீங்கள் வீட்டிலோ, காட்டிலோ அல்லது எங்கிருந்தாலும் பரவாயில்லை. நீங்கள் பற்றுக்கொண்டுள்ளீர்களா அல்லது பற்றற்றிருக்கிறீர்களா என்பதுதான் முக்கியம். நீங்கள் ஏதாவது செய்யும்போது, அதனுடன் பற்றுக்கொண்டும், வேலையை முடித்தவுடன், அதிலிருந்து விடுபட்டும் இருங்கள். அதை மனரீதியாக உங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டாம்.
உடல் ரீதியாக நீங்கள் அவர்களுடன் தொடர்பு கொள்ளாதபோது விஷயங்களை மனதளவில் கொண்டு செல்வதே பிரச்சினை. நீங்கள் கடந்த காலத்தை சுமந்து செல்கிறீர்கள் என்றால், நிகழ்காலத்தை இழந்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று பொருள். உண்மையில், துறத்தல் என்பது கடந்த காலத்தை விட்டுவிட்டு நிகழ்காலத்தில் வாழ்வது என்று பொருள். பற்றின்மை உள்ளே நடக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளாமல், மக்கள் மனதளவில் விடாமல் உடலளவில் விட்டு விலகிச் செல்கிறார்கள்.
நீங்கள் மனதளவில் பற்றற்று இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டால், குடும்பத்திலிருந்து ஓட வேண்டிய அவசியமில்லை. நீங்கள் குடும்பத்திலேயே இருந்துக்கொண்டு துறவியாகலாம். உங்கள் எல்லா கடமைகளையும் நீங்கள் செய்ய முடியும். ஆனால் பற்றற்றும் இருக்க முடியும். குடும்பம் என்பது ஒரு ஆய்வகமாகும், அங்கு நீங்கள் தினமும் உங்களை சோதித்துக்கொள்ள முடியும். அதனால், விரைவாக தூய்மை அடைவீர்கள். அந்த மேற்கோளின் பொருள் இதுதான்.
காலை வணக்கம்... கடந்த காலத்தை விட்டுவிட்டு நிகழ்காலத்தில் வாழுங்கள்..💐
வெங்கடேஷ் - பெங்களூர்
(9342209728)
வெற்றி உண்டாகட்டும்
Comments