1.5.2016
கேள்வி: வணக்கம் ஐயா .. சுயஇன்பம் மற்றும் பாலியல் செயல்கள் முடிந்தபின் ஏன் குற்ற உணர்வு ஏற்படுகிறது. ஒரு சிலரைத் தவிர கிட்டத்தட்ட அனைவருக்கும் இந்த உணர்வு ஏற்படுகிறது. இதுபோன்ற செயல்கள் உலக விஷயங்களை மறந்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்க உதவுகிறது, ஆனால். சில நிமிடங்களுக்குப் பிறகு ஆழ்ந்த குற்ற உணர்வைக் கொண்டுவருவதாகத் தெரிகிறது. ஏன் அப்படி நடக்கிறது?
பதில்: உடலுறவு கொள்வதற்கு இன்னொருவரின் ஒத்துழைப்பு வேண்டும். சுயஇன்பம் இன்னொருவரின் துணை இல்லாமல் இன்பத்தை அனுபவிப்பது. இது போலியான இன்பம் போன்றது. எனவே, உங்களுக்கு குற்ற உணர்வு தோன்றலாம். உங்கள் துணைவருடன் நீங்கள் உடலுறவு கொண்டாலும், உங்கள் துணைவரின் எதிர்பார்ப்பை நீங்கள் நிறைவேற்ற முடியாவிட்டால், உங்களுக்கு குற்ற உணர்வு தோன்றலாம். விந்துவை வீணாக்குவது தவறு என்று நீங்கள் நம்பினால், சுயஇன்பம் மற்றும் பாலியல் மூலம் அதை வீணடிக்கும்போது உங்களுக்கு குற்ற உணர்வு தோன்றலாம்.
பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிப்பது மிகச் சிறந்தது என்று நம்பும் ஒரு சமூகத்தில் நீங்கள் இருந்தால், நீங்கள் பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிக்கத் தவறியதால் உங்களுக்கு குற்ற உணர்வு தோன்றலாம். உங்களுக்கு பொருந்தாத ஒரு துணையுடன் நீங்கள் உடலுறவு கொள்ளும்போது, நீங்கள் திருப்தி அடைய மாட்டீர்கள். எனவே, ஏமாற்ற்றத்தினால் உங்களுக்கு குற்ற உணர்வு தோன்றலாம். உங்களுக்கு சட்டவிரோத உறவு இருந்தால், குற்ற உணர்வு தோன்றலாம்.
நீங்கள் சரியான துணையுடன் உறவு கொண்டால், குற்ற உணர்ச்சியை உணர மாட்டீர்கள் என்று நம்புகிறேன். சரியான துணையுடன் உறவு கொள்ளும்போது, இவருடைய உடல், உயிர், உள்ளம் மூன்றும் இணையும். அந்த உறவில் குற்ற உணர்வு ஏற்படாது.
காலை வணக்கம் .. சரியான துணையுடன் உறவு கொள்ளுங்கள் ..💐
வெங்கடேஷ் - பெங்களூர்
(9342209728)
வெற்றி உண்டாகட்டும்
Comments