4.7.2015
கேள்வி: ஐயா, மக்கள் எப்பொழுது திருப்தி அடைகிறார்கள்?
பதில்: உங்கள் முழுமைத் தன்மையை நீங்கள் உணரும்போதுதான் உங்களுக்கு திருப்தி கிடைக்கும். அதற்கு முன் நீங்கள் திருப்தி அடைய முடியாது. முழுமையாவதற்கான வேட்கை எல்லோரிடமும் இருக்கிறது. அதனால்தான் எல்லோரும் அதிக செல்வத்தையும், அதிக சக்தியையும், புகழையும் பெற முயற்சிக்கிறார்கள். ஆனால் ஒருவர் வெளியில் உள்ள எல்லாவற்றையும் தன்னுடையதாக்குவது இயலாத காரியம். எல்லாவற்றையும் தன்னுடையதாக்கிக் கொண்டு முழுமையடைவதற்கு ஒரே வழி உள்நோக்கிச் செல்வதுதான்.
உங்கள் மூலத்தை நீங்கள் உணரும்போது, எல்லாவற்றிற்கும் உங்கள் மூலமே ஆதாரம் என்பதையும் நீங்கள் உணருவீர்கள். நீங்களே எல்லாம் என்பதை நீங்கள் உணர்ந்தால், அதுவே இறுதி உணர்தல் மற்றும் இறுதி திருப்தி. இந்த உணர்தலுக்கு ஒரு படி கீழே இருந்தாலும் கூட உங்களுக்கு முழு திருப்தி ஏற்படாது. எதை அடைந்தால் அனைத்தையும் அடைந்ததாக ஆகுமோ அதுதான் சுயம்.
காலை வணக்கம் ... உங்கள் சுயத்தை அடையுங்கள்...💐
வெங்கடேஷ் - பெங்களூர்
(9342209728)
வெற்றி உண்டாகட்டும்
コメント