30.3.2016 கேள்வி: ஐயா, ஆன்மிக பாதையில் முன்னேறவேண்டும் என்பதற்காக பொருள் பற்றை துறக்கிறோம். ஆனால் சில சமயங்களில் நாம் பொருள்சார்ந்த உலகில் களிப்படைய உருவாக்கப்பட்ட மாயையான விஷயங்களிலிருந்து விலகி இருக்கும்போது வாழ்க்கை சலிப்பானதக தோன்றுகிறது. ... இந்த முரண்பாட்டிலிருந்து விடுபட்டு அதிக தெளிவைப் பெறுவது எவ்வாறு ? பதில்: பிரச்சனை என்னவென்றால் அது உங்கள் புரிதலோ அல்லது உங்கள் அனுபவமோ அல்ல. அது கடன் வாங்கிய அறிவு. ஆன்மீக ரீதியில் முன்னேறுவதற்கு நீங்கள் பொருள்சார்ந்த உலகத்தை துறக்க வேண்டும் என்று ஒருவர் கூறியுள்ளார். நீங்கள் அதை நம்புகிறீர்கள், அதைப் பின்பற்றுகிறீர்கள். அதுதான் பிரச்சினை. அதனால்தான் நீங்கள் சலிப்பான வாழ்க்கையை உணர்கிறீர்கள். நீங்கள் புரிந்துக் கொண்டு செய்திருந்தால், சலிப்படைய மாட்டீர்கள். நீங்கள் பொருள்சார்ந்த உலகத்தை கைவிடுவதற்கு முன்பு, பொருள்சார்ந்த அனுபவங்களில் சலிப்படைந்திருக்க வேண்டும். பின்னர், நீங்கள் பொருள்சார்ந்த உலகத்தை கைவிட்டால், நீங்கள் சலிப்படையைமாட்டீர்கள். மறுபுறம், நீங்கள் ஆன்மீக ரீதியில் ஆழமாகச் சென்றிருந்தால், நீங்கள் உள் மகிழ்ச்சியை அனுபவித்திருப்பீர்கள். பின்னர், இந்த உள் மகிழ்ச்சியோடு ஒப்பிடும்போது பொருள்சார்ந்த இன்பம் எதுவுமற்றது என்று உணர்ந்திருப்பீர்கள்.
நீங்கள் ஒருபோதும் உள் மகிழ்ச்சியை அனுபவிக்கவுமில்லை, பொருள்சார்ந்த இன்பங்கலில் சலிப்படையவுமில்லை. அதனால், நீங்கள் சலிப்பான வாழ்க்கையை உணர்வது இயற்கைதான். பொருள் பற்றற்றவர்கள் அனைவரும் ஞானமடைந்தவர்களும் அல்ல. பொருள் பற்றுள்ளவர்கள் அனைவரும் துன்பப்படுபவர்களும் அல்ல. நீங்கள் பொருள் பற்றைத் துறந்தவரா இல்லையா என்பது முக்கியமல்ல. நீங்கள் பொருட்களைப் பயன்படுத்துகிறீர்களா அல்லது பொருட்கள் உங்களை பயன்படுத்துகிறதா என்பதுதான் முக்கியம். உண்மையில், துறத்தல் என்பது மனதுடன் தொடர்புடையது, பொருட்களுடன் அல்ல. கிட்டத்தட்ட, எல்லோரும் பொருட்களின் உதவியுடன்தான் வாழ வேண்டும். பொருட்களை நிராகரிப்பது என்பது வாழ்க்கையை நிராகரிப்பதற்கு சமம். ஆன்மீகம் என்பது வாழ்க்கைக்கு எதிரானது அல்ல. உண்மையில், அது வாழ்க்கைக்கானது. ஆன்மா என்றால் ஆற்றல். அனைத்து பொருட்களும் ஆற்றலால்தான் உருவாக்கப்படுகின்றன. எனவே, தேவையானதை விழிப்புணர்வுடன் விருப்பு வெறுப்பு இல்லாமல் பயன்படுத்துவது நல்லது. காலை வணக்கம .. பற்றற்று பற்றுக் கொள்ளுங்கள்...💐
வெங்கடேஷ் - பெங்களூர் (9342209728)
Comments