23.6.2015
கேள்வி: ஐயா. வாய்ப்பு இயற்கையாகவே வருகிறதா அல்லது அதை உருவாக்க வேண்டுமா? வாய்ப்பைப் பற்றி பேசுங்கள்.
பதில்: சாதகமான கூட்டுச் சூழ்நிலைகளின் காரணமாக ஒரு வாய்ப்பு சாத்தியப்படுகிறது. தேவை மற்றும் வழங்கல் விதியின்படி உங்கள் வாழ்க்கையில் எல்லாம் நடக்கிறது. நீங்கள் எதை வேண்டினாலும், இயற்கை அதை சரியான நேரத்தில் வழங்கும்.
உங்கள் கோரிக்கைக்கு ஏற்ப இயற்கை வாய்ப்பை உருவாக்குகிறது. நீங்கள்தான் வாய்ப்பை உருவாக்குகிறீர்கள் என்று அர்த்தம். உங்கள் கோரிக்கை உங்கள் நடுமனதிற்கு சென்று அங்கிருந்து பிரதிபலிக்கும். உங்கள் நடுமனம் ஒவ்வொருவரின் நடுமனதுடனும் இணைக்கப்பட்டுள்ளது.
உங்கள் கோரிக்கை உங்கள் நடுமனதில் பிரதிபலிக்கும்போது, அது பிறரின் நடுமனதை அடையும். பிறகு உங்கள் கோரிக்கையை நிறைவேற்றிக்கொள்ள உங்களுக்கு உதவப் போகிறவர்களைச் சந்திக்க வாய்ப்பு உருவாகிறது. இந்த செயல்முறை நுட்பமான நிலையில் நடப்பதால், அது கண்களுக்குத் தெரிவதில்லை. எனவே மக்கள் அதை அதிர்ஷ்டம் என்று அழைக்கிறார்கள். அதிர்ஷ்டம் என்றால் கண்களுக்குத் தெரியாதது என்று அர்த்தம்.
உங்கள் கோரிக்கையின் தீவிரம் மற்றும் முன்னுரிமையின் படி, வாய்ப்பு குறுகிய காலத்திலோ அல்லது நீண்ட காலத்திலோ வரும். நீண்ட காலத்திற்குப் பிறகு அது வரும்போது, உங்கள் கோரிக்கையை நீங்கள் மறந்துவிட்டிருந்தால், வாய்ப்பை இழப்பீர்கள். வாய்ப்பைப் பயன்படுத்த நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும், ஏனென்றால் அதே வாய்ப்பு மீண்டும் ஒருபோதும் வராது.
காலை வணக்கம் .... விழிப்புடன் இருந்து வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்..💐
வெங்கடேஷ் - பெங்களூர்
(9342209728)
வெற்றி உண்டாகட்டும்
Comments