26.3.2016
கேள்வி: ஐயா, ஹோலி பண்டிகையின் முக்கியத்துவம் என்ன?
பதில்: ஹோலி திருவிழா மிகவும் துடிப்பானது மற்றும் மிகவும் வேடிக்கையானது . இது மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தருகிறது. இந்த திருவிழா வாழ்க்கையை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்பதை மனிதர்களுக்கு நினைவூட்டுகிறது மற்றும் வேடிக்கையாக இருக்க வலியுறுத்துகிறது. இது மக்களிடையே பகைமையை அழித்து நட்பை வளர்க்கிறது. இது சமூக ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது. நீங்கள் உற்சாகமாக ஒருவருக்கொருவர் வண்ணங்களைப் பூசிக்கொள்வதால், இது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
வாழ்க்கை பன்முக பரிமாணங்களை கொண்டது என்பதை இது நமக்கு நினைவூட்டுகிறது. வாழ்க்கையின் எல்லா பரிமாணங்களையும் நாம் அனுபவிக்க வேண்டும். வாழ்க்கை உங்களுக்குக் கொடுப்பதை நீங்கள் ஏற்றுக்கொண்டால், உங்கள் வாழ்க்கை வண்ணமயமாகிவிடும். நீங்கள் வாழ்க்கையிடம் சரணடையும்போது அது ஆன்மீக ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது. வண்ணமயமான வாழ்க்கை கொண்டாட்டமாக இருக்கும், ஏனெனில் அது உங்களுக்கு ஒவொரு கணமும் ஆச்சரியத்தை அளிக்கிறது. அடுத்து என்ன வரும் என்று உங்களுக்குத் தெரியாது. ஹோலி எதிர்மறையை அழித்து நேர்மறையை உருவாக்குகிறது.
காலை வணக்கம் .. உங்கள் வாழ்க்கை வண்ணமயமாக இருக்கட்டும் ..💐
வெங்கடேஷ் - பெங்களூர்
(9342209728)
Comments